“நாயுடன் வாக்கிங் போன பெண்!”.. வந்த வேகத்தில் தூக்கி அடித்த கார் ஓட்டிகள்.. அடுத்து செய்த திகைப்பூட்டும் காரியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் நாயைக் கூட்டிக்கொண்டு வாக்கிங் போன பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதிய நிலையில், காரில் இருந்தவர்கள், காரில் இருந்து இறங்கியதும் செய்த காரியம் சிசிடிவியில் வெளியாகி திகைப்பில் ஆழ்த்தியது.

பிரிட்டனின் பர்மிங்ஹாமில் உள்ள சாலை ஒன்றில் ஒரு பெண்மணி, நாயுடன் வாக்கிங் போய்க் கொண்டிருந்தபோது, அவ்வழியாக திடீரென வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அந்த பெண் மற்றும் அவரது நாய் மீது மோதியதில், அவர்கள் தூக்கியடித்துக்கொண்டு பத்தடி தூரத்தில் இருந்த புதர்ப்பகுதியில் சென்று வீழ்ந்தனர்.
இந்த கோர விபத்தில் அப்பெண்ணின் கால்கள் உடைந்ததுடன், பலத்த காயமும் ஏற்பட்டது. அந்த பரிதாபத்துக்குரிய நாய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனிடையே இவர்கள் மீது மோதிய அந்த கார் சாலையிலேயே பிரேக் போடப்பட்டதும் நின்றுகொண்டது.
அந்த காரில் இருந்து இறங்கிய பெண் உட்பட 3 பேரும், தங்களால் விபத்துக்குள்ளான பெண்மணிக்கு எவ்வித உதவியும் செய்யாமல், தப்பித்தால் போதுமடா சாமி என்கிற ரீதியில் பதைபதைப்புடன் அங்கிருந்து ஓடிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி திகைப்பினை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்
