'மம்மி என் கண்ணு முன்னாடியே'... 'திடீரென மாயமான நடிகை'... 'விலகிய மர்ம முடிச்சுகள்'... நெஞ்சை நொறுக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்காணாமல் போன நடிகையின் உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், அவர் எவ்வாறு உயிரிழந்து இருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல நடிகை நய ரிவேரா, கடந்த புதன்கிழமையிலிருந்து காணாமல் இவர் திடீரென காணாமல் போனார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் என்ன ஆனார் என்பது குறித்துத் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அவரது 4 வயது மகன் கலிபோர்னியாவின் உள்ள ஆற்றில் ஒரு படகில் அமர்ந்திருந்தான். அந்த சிறுவனை போலீசார் மீட்ட நிலையில், நடிகை குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தினார்கள்.
நடிகை நய ரிவேராவை யாராவது கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சிறுவன் கண்டெடுக்கப்பட்ட ஆற்றிலும் நடிகையைத் தேட தொடங்கினார்கள். இந்தச்சூழ்நிலையில் 5 நாட்களாகத் தேடப்பட்ட நடிகை நய ரிவேரா, இன்று பிணமாக ஆற்றிலிருந்து மீட்கப்பட்டார். இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள், நய ரிவேரா தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லை. அதேபோன்று வெளி ஆட்கள் கடத்திச் சென்றதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவாகவே உள்ளது.
இதனிடையே மகனிடம் நடத்திய விசாரணையில், உருக வைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ''நான் திரும்பிப் பார்க்கும் போது அம்மா எனது கண்முன்னாடியே ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்தார்'' எனச் சிறுவன் தெரிவித்துள்ளான். இதனிடையே ஆபத்தில் சிக்கிய மகனைக் காப்பாற்றிவிட்டு நடிகை நீரில் மூழ்கி இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் நடிகையின் மகன் அங்குப் படகில் இருந்துள்ள நிலையில் இது விபத்தாகவே இருக்குமென ஏற்கனவே போலீசார் யூகிக்காதிருந்தனர். இதற்கிடையே உடற்கூறாய்வுக்கு பிறகே நடிகை நய ரிவேரா மரணத்திற்கான உண்மையான காரணம் தெளிவாகத் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
