'அக்கா' கல்யாணம் முடிஞ்ச 1 மணி நேரத்துல... 'தம்பி'க்கு நேர்ந்த துயரம்... இந்த நெலமை 'யாருக்கும்' வரக்கூடாது... கதறித்துடித்த குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அக்காவின் திருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் தம்பி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மனைவி எல்லம்மா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். இளைய மகன் தமிழரசன்(20) இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தமிழரசனின் அக்காவிற்கு நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் காலை 5 மணிக்கு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் தமிழரசன் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்ததை கேட்டு தமிழரசனின் பெற்றோர் கதறித்துடித்து அழுதனர். அக்கா திருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
