'கொஞ்சம் பின்னாடி போங்க மேடம்'... 'இப்ப ஓகே வா!?'.. கண் இமைக்கும் நேரத்தில்... உயிரை உறைய வைத்த கோரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் 'கிராண்ட் கேன்யன்' பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்ற பெண் செங்குத்து பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உலகின் மிகவும் பிரபலமான செங்குத்துப்பள்ளத்தாக்கு 'கிராண்ட் கேன்யன்' அமைந்துள்ளது.
பாறைகளும், உயரமான, கரடுமுரடான மலை உச்சிகளையும் கொண்ட கிராண்ட் கேன்யன் சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது.
பல விதமான அடுக்குகளையும், பல அடி ஆழத்தையும் கொண்ட இந்த செங்குத்து பள்ளத்தாக்கின் உச்சியில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள, சுற்றுலா பயணிகள் பலர் விரும்புகின்றனர். அவ்வாறு புகைப்படம் எடுக்க முற்படும்போது நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து பலர் உயிரிழக்கவும் நிகழ்கிறது.
இந்நிலையில், அரிசோனா பகுதியை சேர்ந்த மரியா என்ற 59 வயது நிரம்பிய பெண் தனது குடும்பத்தினருடன் விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த சனிக்கிழமை 'கிராண்ட் கேன்யன்' பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள மதர் சந்திப்பு பகுதியில் அவர் குடும்பத்தினருடன் பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.
மேலும், தான் தனியாக நின்று புகைப்படம் எடுக்க விரும்பிய அவர், அங்கு மலை முகட்டின் உச்சியில் நின்றுகொண்டு புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளார்.
அப்போது நிலை தடுமாறிய மரியா சுமார் 100 அடி செங்குத்து பள்ளத்தாக்கில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளத்தாக்கில் தவறி விழுந்த மரியாவின் உடலை மீட்பு படையினர் நீண்ட தேடுதலுக்கு பின் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவாதாக அரிசோனா போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
