''சென்னைக்கு ரயிலில் வந்த கச்சா எண்ணெய்'... 'பாலத்திலிருந்து விழுந்த பெட்டிகள்'... அடுத்த நொடி டமார் என கேட்ட சத்தம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னைக்குக் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளானதில் 6 பெட்டிகள் வெடித்துத் தீப்பிடித்தன.
சென்னைக்குச் சரக்கு ரயில் மூலமாகக் கச்சா எண்ணெய் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் விசாகப்பட்டினத்திலிருந்து 56 டேங்கர்களில் கச்சா எண்ணெய் எடுத்து வரப்பட்டது. ஓங்கோல் என்ற பகுதியில் மேம்பாலத்தின் மேலே ரயில் வரும்போது, திடீரென அதிர்வு ஏற்பட்டது. அப்போது தண்டவாளத்தில் ஏதோ பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில நொடிகளில் சரக்கு ரயில் தடம்புரண்டு, பாலத்திலிருந்து கீழே விழுந்தது விழுந்தது.
டேங்கர்களில் கச்சா எண்ணெய் இருந்ததன் காரணமாக, கீழே விழுந்த அடுத்த சில நொடிகளில் 6 பெட்டிகள் வெடித்துச் சிதறின. அவற்றிலிருந்த கச்சா எண்ணெய் முழுவதுமாக எரிந்து கொண்டிருக்கிறது. தகவலறிந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகிறார்கள். எனினும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
விபத்து குறித்து ரயில்வே துறையினர் கூறும்போது, ''மேம்பாலத்தின் மீது தண்டவாளத்தில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதில் மண் சேர்ந்ததால் இந்த சரக்கு ரயில் தடம்புரண்டதாக'' கூறினார்கள். இந்த விபத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.