'ஒரு பக்கம் ஜேசிபி'... 'மறுபக்கம் அசுர வேகத்தில் வந்த பொலிரோ கார்'... 'சிவனேன்னு நின்று கொண்டிருந்த இளைஞர்'... நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபல விபத்துகளில் நூலிழையில் தப்பினார்கள் என்ற கூற்றுப் பரவலாகச் சொல்லப்படுவது உண்டு. அப்போது அவர்கள் கண்முன்பே காணும் காட்சிகள் என்பது அவ்வளவு பயங்கரமான ஒன்றாக இருந்திருக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது கேரளாவில் நடந்துள்ளது.

சமூகவலைதளைங்களில் வைரலாகும் இந்த வீடியோ காட்சியானது கேரளாவில் நடந்த விபத்து ஒன்றில் பதிவாகியுள்ளது. இது கேரளாவில் எந்த பகுதியில் நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. சாலையோரத்தில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மொபைலை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் வேகமாக வந்த ஜேசிபி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது மோத வருகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர் சுதாரிப்பதற்குள், அவருக்கு எதிரே படு வேகமாக வந்த பொலிரோ வாகனம் ஒன்று வந்த வேகத்தில் ஜேசிபி மீது மோதுகிறது.
இதில் அந்த இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார். பொலிரோ வாகனம் மட்டும் இடையில் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் ஜேசிபியானது அந்த இளைஞர் மீது மோதியிருக்க வாய்ப்புள்ளது. கார் மோதிய வேகத்தில் அது அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
