வீட்டு வாசல்ல உட்கார்ந்து பேசிட்டிருந்தோம்... கண்ண மூடி திறக்கறதுக்குள்ள... எல்லாம் முடிஞ்சுபோச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகாசி அருகே, அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்தது. வீட்டிற்குள் இருந்த 3 பெண்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.

சிவகாசி ரயில் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சுந்தர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுந்தர் தனது மனைவியுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலையில் இருந்து அதிவேகமாக வந்த லாரி, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுந்தரின் வீட்டிற்குள் புகுந்தது.
இதில் பலத்த சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து கணவன், மனைவி இரண்டு பேரையும் மீட்டனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டிற்குள் சிக்கியருந்த 3 பெண்களை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி பத்திரமாக மீட்டனர்.
காவல்துறையின் விசாரணையில் லாரியை ஓட்டி வந்த பாலகிருஷ்ணன், மது போதையில் லாரி ஒட்டி வந்தது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் லாரி ஒட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
