VIDEO: என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து!.. 5 பேர் பலி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று நடந்த விபத்தில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில், 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
