அடுத்த 300 வருஷத்துக்கு டேஞ்சர்.. காணாமல்போன கதிரியக்க கேப்ஸ்யூல்.. மொத்த படையையும் இறக்கிய நாடு.. திகிலூட்டும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 01, 2023 10:29 AM

ஆஸ்திரேலியாவில் காணாமல்போனதாக கருதப்படும் கதிரியக்க கேப்ஸ்யூலை கண்டுபிடிக்கும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

A radioactive capsule is missing in Australia search in Progress

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | “வீட்ல அப்பா ட்ரவுசரோட ஆடுன வீடியோலாம் வெச்சு பிளாக்மெயில் பண்றாங்க... அவனுக்காக, பெத்த பொண்ண அசிங்கமா பேசுறாங்க...” - பிரிக்யா & உருக்கம்.!

ஆஸ்திரேலியாவின் மேற்கு நியூமெனில் உள்ள ரியோ டின்டோ சுரங்கத்திலிருந்து சமீபத்தில் ஒரு டிரக் கிளம்பி இருக்கிறது. இது பெர்த் மாகாணத்தில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தின் சேமிப்புக் கிடங்கிற்கு பயணித்திருக்கிறது. சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவு பயணித்துள்ள இந்த ட்ரக்கில் இருந்து வெள்ளி கேப்சியூல் ஒன்று காணாமல் போயிருக்கிறது. சீசியம் - 137 எனும் ஆபத்தான கதிரியக்க தனிமம் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அதனை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 8 மில்லி மீட்டர் உயரமும் 6 மில்லி மீட்டர் அகலமும் கொண்ட இந்த கதிரியக்க கேப்ஸ்யூல் ஆபத்தானதாக கருதப்படுகிறது. சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களில் இந்த கேப்ஸ்யூல் பயன்படுத்தப்படுகிறது. ட்ரக்கில் இருந்த கேப்ஸ்யூல் எங்காவது கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து  கையடக்க கதிர்வீச்சு கண்டறிதல் சாதனங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் இந்த கேப்ஸ்யூலை கண்டுபிடிக்கும் பணிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அடுத்த 300 ஆண்டுகளுக்கு அதை நெருங்கும் எவருக்கும் கதிரியக்கம் காரணமாக ஆரோக்கிய அபாயம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், பெர்த்தின் வடகிழக்கு புறநகர்ப் பகுதிகள் உட்பட, மாகாணத்தின் தெற்குப் பகுதியில் கதிரியக்க கசிவு இருப்பதைக் குறித்து குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இங்கே சுமார் 2 மில்லியன் மக்கள் வசித்துவருகின்றனர். சீசியம்-137 உடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கூடிய விரைவில் அந்த கேப்ஸ்யூலை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read | "அந்த மொமெண்ட்-க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்".. பிக்பாஸ் கதிரவன் EXCLUSIVE..!

Tags : #RADIOACTIVE CAPSULE #AUSTRALIA #SEARCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A radioactive capsule is missing in Australia search in Progress | World News.