இதையா பறவை எச்சத்துல போட்டு வச்சிருந்தீங்க.. குப்பை போல கிடந்த ஓவியம்.. ஏலத்தில் நடந்ததை பார்த்துட்டு பிரம்மித்துப்போன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jan 31, 2023 09:48 PM

உலகப் புகழ்பெற்ற ஓவியர் அந்தோணி வான் டிக்கின் பழங்கால படைப்பு ஒன்று மில்லியன் கணக்கில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

Anthony van Dyck painting found in NY shed sells for 3 Million USD

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | பல கனவுகளோட நடந்த திருமணம்.. 3 வது நாளில் மணமகனுக்கு நேர்ந்த சோகம்.. உறைந்துபோன குடும்பத்தினர்..!

உலகின் தலை சிறந்த ஓவியர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் அந்தோணி வான் டிக். ஸ்பானிஷ் கட்டுப்பாட்டில் இருந்த தெற்கு நெதர்லாந்தில் 1599–1641 ஆண்டுகளில் வாழ்ந்தவர். இவருடைய பல படைப்புகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய ஓவியம் ஒன்று நியூயார்க் மாகாணத்தில் உள்ள பண்ணையில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறது. அதன் மீது பறவை எச்சம் விழுந்து பராமரிக்கப்படாமல் இருந்திருக்கிறது.

இதனிடையே பழங்கால ஓவியங்களை சேகரித்துவரும் ஆல்பர்ட் பி ராபர்ட்ஸ் என்பவர் இந்த ஓவியத்தை கேள்விப்பட்டு அதனை வாங்க முடிவு செய்திருக்கிறார். அப்போது வெறும் 600 டாலர்கள் செலவழித்து ஆல்பர்ட் பி ராபர்ட்ஸ் இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வாங்கியுள்ளார். அந்தோணி வான் டிக் வரைந்த இரண்டு பெரிய ஓவியங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் நிபுணர்கள்.

Anthony van Dyck painting found in NY shed sells for 3 Million USD

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இந்த ஓவியம் 1615 மற்றும் 1618 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆல்பர்ட் பி ராபர்ட்ஸ் தான் வாங்கிய ஓவியத்தை ஏல நிறுவனமான சொதேபி மூலமாக விற்பனை செய்ய முயற்சித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த ஓவியத்தை ஏல நிறுவனத்தின் நிபுணர்கள் அந்த ஓவியத்தை பரிசோதனை செய்திருக்கின்றனர்.

Anthony van Dyck painting found in NY shed sells for 3 Million USD

Images are subject to © copyright to their respective owners.

அதிர்ஷ்டவசமாக அந்த ஓவியம் சேதமடையாமல் இருந்திருக்கிறது. இதனையடுத்து சமீபத்தில் இந்த ஓவியம் ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது. அப்போது 3.1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது இந்த ஓவியம். Sotheby நிறுவனத்தின் ‘Master Paintings Part I’ எனும் நிகழ்ச்சியின் அடிப்படையில் இந்த ஓவியம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. 600 டாலருக்கு வாங்கப்பட்ட ஓவியம் 3.1 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | "இது கனவா.. நனவா?".. விராட் கோலியிடமிருந்து வந்த பாராட்டு.. சர்ப்ரைஸான இளம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை..!

Tags : #ANTHONY VAN DYCK #ANTHONY VAN DYCK PAINTING

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anthony van Dyck painting found in NY shed sells for 3 Million USD | World News.