"யப்பா, என்ன ஷாட் இது?".. வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடிச்ச அந்த ஒரு 'சிக்ஸ்'.. வீடியோ'வ பாத்து அரண்டு போன ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடித்த சிக்ஸ் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read | "எது, ஒரு செம்மறி ஆட்டின் விலை இம்புட்டு கோடியா?".. பிரமிக்க வைத்த பின்னணி!!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, டி 20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதில் முதலாவதாக டி 20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதன் முதல் போட்டி நேற்று (06.10.2022) நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் பரபரப்பு உருவானது.
இதனைத் தொடர்ந்து, கடைசி ஓவரில் ஒரு பந்தை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டிப் பிடித்த ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக, இரண்டு போட்டிகள் கொண்ட டி 20 தொடரை ஆஸ்திரேலிய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி, நாளை (07.10.2022) நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரரான கைல் மேயர்ஸ் அடித்த சிக்ஸ் ஒன்று, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கைல் மேயர்ஸ், 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 39 ரன்கள் எடுத்திருந்தார்.
இவர் கேமரூன் க்ரீன் வீசிய பந்தை சிக்சருக்கு அடித்த விதம் குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கூட பேசி வருகின்றனர். கேமரூன் க்ரீன் வீசிய பந்து, ஆப் ஸ்டம்புக்கு வெளியே லெந்த் பந்தாக வர அதனை அடித்த மேயர்ஸ், ஸ்வீப்பர் கவர் திசையில் சிக்ஸராக மாற்றினார். வேகப்பந்து வீச்சில் இப்படி ஒரு ஷாட் அடிப்பது என்பது சற்று கடினமான விஷயம் தான்.
அப்படி இருந்த போதும், மேயர்ஸ் அடித்த சிக்ஸ் கிரிக்கெட் உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கம்பீர், கில்கிறிஸ்ட் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் கூட இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். அதே போல, ரசிகர்கள் கூட கிரிக்கெட் உலகின் சிறந்த சிக்ஸர் ஷாட் இது தான் என்றும் வியப்புடன் குறிப்பிட்டு வருகின்றனர்.
You are not allowed to do this! @kyle_mayers 😂😂 pic.twitter.com/StFx5N2Wb3
— Gautam Gambhir (@GautamGambhir) October 5, 2022
Also Read | பிளாஸ்டிக் பெட்டிக்குள் குவியலாக இருந்த 'தங்க' பற்கள்.. உலகையே அதிர வெச்ச பயங்கரம்!!

மற்ற செய்திகள்
