"அந்த மொமெண்ட்-க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்".. பிக்பாஸ் கதிரவன் EXCLUSIVE..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த கதிரவன் நமது சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
Image Credit : Vijay Television
தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக சென்ற பிக்பாஸ் போட்டியில் ஒருகட்டத்தில் அசீம், விக்ரமன், ஷிவின், மைனா, அமுதவாணன் மற்றும் கதிரவன் ஆகியோர் எஞ்சி இருந்தனர். அப்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் பணமூட்டை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் பணமூட்டையுடன் வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்த நிலையில் கதிரவன் அந்த பணமூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிரவைத்தார்.
Image Credit : Vijay Television
பின்னர் தான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை எனவும், இத்தனை தூரம் வந்ததே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கமலிடம் ஃபினாலே-வின் போது கதிர் சொல்லியிருந்தார். இந்நிலையில், கதிர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய பிக்பாஸ் அனுபவங்கள் குறித்தும் தன்னுடைய முடிவுகள் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து பணமூட்டையுடன் வெளியேறியது ஏன்? என கதிரவனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,"நான் டைட்டில் ஜெயிச்சு இருந்தாலும் அதை என்வீட்டுல வச்சுக்குற ஒரு பொருளா தான் இருந்திருக்கும். ஆனா மக்களோட மனசை ஜெயிக்கிறது தான் முக்கியம். நான் வெளியே வந்த பிறகு நெறய பேரு என்னோட பேசுனாங்க. நல்லா விளையாட்டுனீங்க, சூழ்நிலையை சரியா புரிஞ்சுகிட்டு நடந்துகிட்டீங்க-ன்னு சொன்னாங்க. அதுவே எனக்கு போதும்" என்றார்.
மேலும், சரியான தருணத்திற்காக காத்திருந்ததாக கூறிய அவர்"ஒவ்வொரு வாரமும் யாராவது வெளியே போகும்போதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடும். நல்ல வேளையா அப்போது எல்லோரும் திரும்பி உள்ள வந்திருந்தாங்க. நான் உள்ள வந்தது சில இடங்கள்ல எப்படி நடந்துக்கணும்னு காட்டத்தான். அதோட என்னோட போட்டி தன்மை மற்றும் மக்களை மகிழ்விக்க மட்டுமே. அதை நான் சரியா செஞ்சேன்னு தோணுச்சு. வெளியே போன எல்லா போட்டியாளர்களும் உள்ள வந்தாங்க. அந்த தருணத்துக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போவே போதும்னு முடிவு எடுத்துட்டேன்" என்றார்.