இளைஞருக்கு வந்த மெசேஜ்.. அக்கவுண்ட்ல கிரெடிட் ஆன ₹4 கோடி ரூபாய்.. மனுஷன் அடுத்து செஞ்ச விஷயம் இருக்கே.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் தவறுதலாக அக்கவுண்டில் கிரெடிட் ஆன பணத்தை கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

காலையில் கண்விழித்து பார்க்கும் போது, நம்முடைய வங்கி கணக்கில் 4 கோடி ரூபாய் இருந்தால் எப்படி இருக்கும்? உண்மையிலேயே ஆஸ்திரேலியாவை சேர்ந்த அப்தெல் காடியா எனும் இளைஞருக்கு இந்த விநோத அனுபவம் நடைபெற்றிருக்கிறது. இவருடைய அக்கவுண்டில் திடீரென 760,000 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4.2 கோடி ரூபாய்) கிரெடிட் ஆகியுள்ளது. இதனால் ஆச்சர்யமடைந்த அந்த நபர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த பணத்தை கொண்டு எப்படி சொகுசாக வாழலாம் என அவர் சிந்திக்க துவங்கியிருக்கிறார்.
அக்கவுண்டில் கிரெடிட் ஆன பணத்தை கொண்டு தங்க நாணயங்கள், நகைகள், தங்க கட்டிகள் ஆகியவற்றை வாங்கியுள்ளார் காடியா. மேலும், ஏடிஎம் மூலமாக லட்சக்கணக்கான பணத்தை எடுத்த அவர் ஷாப்பிங் மாலுக்குள் சென்று தனக்கு வேண்டிய உடைகள், ஷூ உள்ளிட்ட பொருட்களை வாங்கி குவித்திருக்கிறார்.
இதனிடையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாரா தோர்ன் - கோரி தம்பதி வங்கியில் இருந்து தங்களுக்கு வரவேண்டிய தொகையை எதிர்பார்த்து இருந்திருக்கின்றனர். வீடு வாங்கும் கனவில் இருந்த இருவரும் அருகில் உள்ள வங்கியில் கடன் பெற்றிருக்கிறார்கள். அப்போது, வங்கி அதிகாரி ஒருவர் இந்த தம்பதிக்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக காடியாவுக்கு அனுப்பியதே இத்தனை சிக்கலுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
உடனடியாக இதுகுறித்து காவல்துறையில் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அக்கவுண்ட் நம்பரை டிராக் செய்த அதிகாரிகள் எளிதில் காடியாவை கண்டுபிடித்திருக்கின்றனர். உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காடியா, தனது அக்கவுண்டில் அந்த பணம் இருந்ததால் தான் செலவு செய்ததாகவும் எவ்வித குற்றங்களிலும் ஈடுபடவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தனது அக்கவுண்டில் கிரெடிட் ஆன பெரும்பாலான பணத்தை செலவழித்துவிட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் காடியா. இது உள்ளூர் மக்களிடையே வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
