கடலில் மிதந்த பாட்டில்... அதுக்குள்ள இருந்த ரகசிய செய்தி.. அதை படிச்சுட்டு எழுதியவரை தேடியலையும் நபர்.. திகைக்க வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்விடுமுறைக்கு சென்ற இடத்தில் பயணி ஒருவர் கண்டுபிடித்த பாட்டில் அவரது வாழ்க்கையையே மாற்றியமைத்திருக்கிறது. இப்போது அதுகுறித்த தேடலில் இருக்கிறார் அந்த நபர்.

பாட்டில்
அமெரிக்காவின் உட்டாஹ் மாகாணத்தை சேர்ந்தவர் கிளின்ட் பஃபிங்டன் (Clint Buffington). இவர் கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறைக்காக கரீபியனுக்கு சென்றிருக்கிறார். அப்போது கடற்கரையில் ஒரு பாட்டில் கரையொதுங்கி கிடப்பதை கிளின்ட் பார்த்திருக்கிறார். அதற்குள் காகிதம் ஒன்றும் சுருட்டப்பட்டு இருந்திருக்கிறது. இதனால் ஆச்சர்யம் அடைந்த அவர் உடனடியாக அதை பிரித்து பார்த்திருக்கிறார். அதில் இருந்த விஷயம்தான் அவரை தேடலில் இறக்கியுள்ளது.
அடிப்படையில் கிளின்ட் ஒரு வினோதமான செயலை செய்துவருகிறார். கடலில் ரகசிய செய்திகளுடன் மிதக்கும் பாட்டில்களை கண்டறிந்து அவை குறித்து தன்னுடைய பிளாக்கில் பதிவிட்டு வருகிறார். இதன்மூலம், பல நண்பர்களையும் அவர் சேர்த்திருக்கிறார். பொதுவாக கடலில் ஒரு ரகசிய செய்தி கிடைத்தால் அதனை தெரிந்துகொள்ளவும் ஒருவர் இருப்பார் எனக்கூறும் கிளின்ட் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த சுவாரஸ்ய செயலில் ஈடுபட்டு வருகிறார்.
செய்தி
கரீபியனில் இவருக்கு கிடைத்த பாட்டிலில் இருந்த பேப்பரில்,"இந்த செய்தியை படிப்பவர்களை தேடி விரைவில் அதிர்ஷ்டம் வரும்" எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் இம்ப்ரெஸ் ஆன, கிளின்ட் இந்த செய்தியை எழுதியவர்களை தேடிவருகிறார். மேலும், இதுகுறித்து அவர் பேசுகையில்,"இது வாஷிங்டனில் உள்ள பெக்கி மற்றும் போர்ட்லேண்டில் உள்ள ஜிம் எனும் இருவரால் எழுதப்பட்டிருக்கிறது. பெக்கி மற்றும் ஜிம் ஆகியோர் 2018 ஆம் ஆண்டில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஜாக்சன்வில்லி கடற்கரையில் இருந்து இந்த பாட்டிலை வீசினர் என்று அந்த காதித செய்தி மூலம் தெரியவந்திருக்கிறது. இதில் ஒரு மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அதனால் ஆச்சர்யமானேன். அந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ஆனால் அதற்க்கு பதில் வரவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் பேஸ்புக், ட்விட்டர் வாயிலாக இந்த செய்தியை எழுதிய பெக்கி மற்றும் ஜிம் ஆகியோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் கிளின்ட்.

மற்ற செய்திகள்
