குழந்தைக்கு 'இந்தியா' என பெயர் வைத்த பாகிஸ்தான் தம்பதி.. அவங்களே சொன்ன விநோத காரணம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி ஒன்று தங்களது மகனுக்கு இந்தியா என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்த இந்த தம்பதியின் பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "ஆந்திர மாநிலத்தின் தலைநகர் இனி இதுதான்".. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!
பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைப்பது எப்போதுமே சற்று சவாலான காரியம் தான். பல்வேறு வகைகளில் பெயர் தேர்வு நடைபெறும். அதில் இருந்து இறுதியாக பெயரை தேர்ந்தெடுப்பது வரை பல குழப்பங்கள் நிலவும். ஆனால், பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி ஒன்று தங்களது மகனுக்கு வித்தியாசமாக இந்தியா என பெயரிட்டுள்ளனர். அத்துடன், புதிதாக பெற்றோர்களான தம்பதிகளுக்கு அறிவுரையையும் வழங்கி இருக்கிறார்கள் இந்த பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி.
ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர். இவருக்கும் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் இருவருக்கும் இடையே சிறுவன் தூங்குகிறான். மேலும், அந்த பதிவில் அறிவுரை ஒன்றையும் புதிதாக பெற்றோர்களான தம்பதிக்கு வழங்கி இருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அந்த பதிவில்,"புதிய பெற்றோர்கள் அனைவருக்கும் எங்களுடைய எச்சரிக்கை. ஒருவேளை நீங்களும் எங்களைப் போல இதே போன்ற நடைமுறையை செய்த பெற்றோர்களாக இருந்தால் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எங்களது மகன் இப்ராஹிம் பிறந்தவுடன் எங்கள் அறையிலேயே அவனை தூங்க வைப்பது வழக்கம். புதிய பெற்றோர்களான எங்களுக்கு அவருடைய பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை இருந்தது. அதுவே இந்த செயலுக்கு காரணமாகவும் அமைந்திருந்தது."
"இப்ராஹிம் வளர்த்த பிறகும் எங்கள் அறையிலேயே தூங்க ஆரம்பித்து விட்டான். அவனுக்கு என தனி அறை ஒதுக்கி கொடுத்து விட்டோம். இருப்பினும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு எங்களுடைய அறையை அவன் பயன்படுத்திக் கொள்கிறான். நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன். எனது மனைவி வங்கதேசத்தை தாயகமாகக் கொண்டவர். எங்களுக்கு நடுவில் எப்போதும் இருக்கும் எங்கள் மகன் இப்ராஹிமுக்கு புதிய பெயர் சூட்டி உள்ளோம். பாகிஸ்தானிற்கும் வங்கதேசத்தைச் சேர்ந்தவருக்கும் இடையே இருப்பதால் அவனை இந்தியா என அழைக்கிறோம். எனது வாழ்க்கையில் அவ்வப்போது இந்தியா என் வாழ்க்கையில் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது" என ஒமர் குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இப்பதிவு வைரலானதை தொடர்ந்து தான் நகைச்சுவையாகவே இந்த பதிவை எழுதியதாகவும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் ஒருவர் நீங்கள் பாகிஸ்தானி அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர், உங்களது மகன் இந்தியா என்றால் புகைப்படத்தை எடுத்தவர் அமெரிக்காவா? என பகடியாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து இருக்கும் ஒமர் "இதற்கு பதில் அளித்தால் அதை நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது. உண்மையிலேயே எனது உறவினர் ஒருவர் தான் இந்த புகைப்படத்தை எடுத்தார். அவர் அமெரிக்காவில் செட்டிலானவர்" என தெரிவித்து இருந்தார். ஒமர் இஸாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.