பல கனவுகளோட நடந்த திருமணம்.. 3 வது நாளில் மணமகனுக்கு நேர்ந்த சோகம்.. உறைந்துபோன குடும்பத்தினர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Jan 31, 2023 08:09 PM

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணமான 3 வது நாளில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Chennai Newly married Man dies in Road accident 3 Days after marriage

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நாங்க கேட்ட உதவிய செஞ்சிருக்காரு.." ஜிகர்தண்டா டபுள் X படப்பிடிப்பில் நெகிழ்ச்சி.. லாரன்ஸ்க்கு நன்றி சொன்ன மலை கிராம மக்கள்..!

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் டிரைவராக இவர் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷோபனா எனும் இளம் பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து மணிகண்டன் - ஷோபனா ஆகிய இருவரும் ஷெனாய் நகரில் உள்ள ஷோபனாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர்.

விருந்திற்காக மாமியார் வீட்டுக்கு சென்ற மணிகண்டன் தனது மனைவி ஷோபனாவை அங்கேயே இறக்கிவிட்டு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் தனது நண்பர்களை சந்தித்துவிட்டு தனது மாமியார் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது ஷெனாய் நகரில் உள்ள புல்லா அவென்யூ பகுதியில் அவர் வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார்.

Chennai Newly married Man dies in Road accident 3 Days after marriage

Images are subject to © copyright to their respective owners.

இதனால் மணிகண்டனுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அப்போது அங்கிருந்தவர்கள் பதறியடித்து மணிகண்டனை மீட்டிருக்கின்றனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் மணிகண்டனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவசர சிகிச்சை பிரிவில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அவருடைய மனைவி மருத்துவமனை வளாகத்தில் கதறி அழ அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்தது. இதனையடுத்து அவருடைய உடல் உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

Chennai Newly married Man dies in Road accident 3 Days after marriage

Images are subject to © copyright to their respective owners.

திருமணமான 3-வது நாளில் மணமகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மதுரவாயல் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | குழந்தைக்கு 'இந்தியா' என பெயர் வைத்த பாகிஸ்தான் தம்பதி.. அவங்களே சொன்ன விநோத காரணம்..!

Tags : #CHENNAI #NEWLY MARRIED #MAN #ROAD ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Newly married Man dies in Road accident 3 Days after marriage | Tamil Nadu News.