VIDEO: 'வாங்க... வாங்க... ப்ரெட், ஃப்ரூட்ஸ் எல்லாம் இருக்கு... நல்லா சாப்பிடுங்க'... 'மான்களை வீட்டுக்குள் அழைத்து விருந்து வைத்த பெண்'... வினையாக மாறிய கருணை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 12, 2020 04:21 PM

அமெரிக்காவில் மான்களை வீட்டிற்குள் அழைத்து பிரெட், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களை பரிமாறிய பெண்ணின் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

woman arrested for feeding deer with fruits breads

அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், வனத்தில் சுற்றித்திரிந்த மான்களை வீட்டிற்குள் அழைத்து பிரெட், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களை சாப்பிட கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

 

 

இதைத் தொடர்ந்து, உணவு வழங்கிய அந்தப் பெண் மீது கொலார்டோ வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவருக்கு 100 டாலர்கள் அபராதமும் விதித்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் பேசுகையில், 'நீங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் தற்செயலாக அந்த விலங்குகளை  கொல்வதோடு, உங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வழியில் செல்கிறீர்கள். நீங்கள் செல்லப்பிராணி வளர்க்க ஆசைப்பட்டால்,    மக்களுடன் வாழ்ந்து, வளர்ந்து பழகிய நாய், பூனை போன்றவற்றை தேர்வு செய்யுங்கள். மான்கள் வந்து உங்கள் வீட்டு முற்றத்தில்  வருவதற்கு பழக்கப்படுத்துகிறீர்கள் என்றால், மலை சிங்கங்களையும் உங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும்படி விரும்புகிறீர்கள் என்பதை  நினைவில் கொள்ளுங்கள்' என கூறியுள்ளனர்.

Tags : #DEER #FOOD #FRUITS