இந்த ஆட்டம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?.. வைரல் வீடியோ உள்ளே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 11, 2019 12:39 PM

வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த சமீபத்திய டெஸ்ட் போட்டியில்,ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே வென்ற கேப்டன்,ஒரே டெஸ்டில் 10 விக்கெட் மற்றும் அரைசதம் விளாசிய மூன்றாவது கேப்டன் என்னும் பெருமைகளுக்கு ரஷித் கான் சொந்தக்காரராகி இருக்கிறார்.

Video of kids dancing after Afghanistan test win goes viral

இதுதவிர டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் வெற்றியை பதிவு செய்த கேப்டன் எனும் பெருமையையும் ரஷித் கான் பெற்றுள்ளார். அதே நேரம் 10 வெவ்வேறு நாடுகளிடமும் டெஸ்ட் போட்டிகளில் தோற்ற ஒரே அணி என்னும் மோசமான சாதனையை வங்கதேசம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வரலாற்று வெற்றியை, அந்நாட்டு சிறுவர்-சிறுமியர் ஆடிப்பாடி கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோவை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டைச் சேர்ந்த தலைமை அதிகாரி ஷபிக் ஸ்டானிசாய் வெளியிட்டு இருக்கிறார். அதில் தொலைக்காட்சியில் ஆப்கானிஸ்தானின் வெற்றி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதைப்பார்க்கும் சிறுவர்கள் தலைகால் புரியாமல் குதித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இதேபோல பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள் ஆப்கான்!