ஜப்பானில் தொடங்கிய LOVES.. கிருஷ்ணகிரில வெச்சு கல்யாணம்.. தைவான் பெண்ணை கரம்பிடித்த தமிழன்!! சுவாரஸ்யம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுவாக, காதலுக்கு கண்ணில்லை என ஒரு கூற்று உள்ளது. அதாவது காதலுக்கு வயது, மதம், மொழி, நாடு உள்ளிட்ட எந்தவொரு விஷயங்களும் இல்லாமல் தடைகள் தாண்டி இரு மனதுக்கு இடையே உருவாகும் அன்பின் வெளிப்பாடாகும்.

Also Read | "தீபாவளி ஸ்பெஷலா".. ஊழியர்களுக்கு இப்டி ஒரு பரிசா??.. வியந்து பார்க்க வைத்த சென்னை தொழிலதிபர்!!
அப்படி கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ள காதல் தொடர்பான செய்தி, பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியை அடுத்த ஆவத்துவாடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே கல்லூரியில் தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜான் என்ற பெண்ணும் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், ராஜேந்திரன் மற்றும் சியாங் ஷியா ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தங்களின் காதல் பற்றி வீட்டில் தெரிவிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, அவர்களும் காதலை சொல்ல இருவரது வீட்டிலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ராஜேந்திரன் மற்றும் சியாங் ஷியா ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, தமிழ் முறைப்படி திருமணம் செய்ய ஜப்பானில் இருந்து ராஜேந்திரன், சியாங் ஷியா உள்ளிட்டோர் காவேரிபட்டணம் வந்துள்ளனர். மேலும் அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து ராஜேந்திரன் - சியாங் திருமணம் நடந்துள்ளது. இருவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்ற நிலையில், அனைவரும் தங்களின் வாழ்த்துக்களையும் மணமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசும் மணப்பெண் சியாங் ஷியா, நாங்கள் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்றும், தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ் கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞருக்கும், தைவான் பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புதுமண தம்பதியை நெட்டிசன்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
