ராகுல் டிராவிட்டை இப்படி பார்த்ததே இல்லை.. கோலி - அஸ்வின் - பாண்டியாவை மிஞ்சும் ஆக்ரோஷம்.. ICC வெளியிட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டியின் UNSEEN வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Oct 24, 2022 10:15 PM

இந்திய அணியின் இதுவரை காணாத வெற்றிக் கொண்டாட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Unseen Rahul Dravid Animated Video after India Pakistan

8-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்கி உள்ளது . ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மேல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் மற்றும் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Unseen Rahul Dravid Animated Video after India Pakistan

இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சேஸிங்கை துவங்கியது. ஆரம்பத்திலேயே ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். அதன்பிறகு உள்ளே வந்த கோலி நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் அவுட்டாகி வெளியேற பாண்டியா உள்ளே வந்தார். இந்த இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதன் பலனாக இந்திய அணி வெற்றியை நோக்கி சீராக முன்னேறியது. கடைசி ஓவரின் முதல் பந்தில் பாண்டியா அவுட் ஆகினார். 40 ரன்கள் எடுத்திருந்த பாண்டியா வெளியேறிய நிலையில் உள்ளே வந்த தினேஷ் கார்த்திக், 1 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் அவுட் ஆகி ஷாக் கொடுத்தார்.

இதனால் மைதானமே பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது. இறுதி பந்தில் 2 ரன் எடுக்க வேண்டிய நிலையில் அஸ்வின், வீசப்பட்ட பந்தை வைட் வாங்க ஸ்கோர் சமன் ஆனது. அடுத்த பந்தில் எக்ஸ்டரா கவரில் அஸ்வின் ஒரு ரன் அடித்து கொடுக்க இந்தியா த்ரில் வெற்றிபெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் கோலி அபாரமாக ஆடி 82 ரன்கள் குவித்தார். 53 பந்துகளை சந்தித்திருந்த கோலி  6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசினார்.

Unseen Rahul Dravid Animated Video after India Pakistan

இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்ட போது, இந்திய அணியின் டஃக்கவுட் வழக்கத்திற்கு மாறான உணர்ச்சிப் பெருக்கில் திளைத்தது. குறிப்பாக ரோகித் சர்மா, விராத் கோலி, அஸ்வின், பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆக்ரோஷமாக கத்தி வெற்றியை கொண்டாடினர். அதே போல் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழக்கத்திற்கு மாறாக அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் டிராவிட் இதற்கு முன்பு ஆக்ரோஷமாக இருப்பினும் நேற்றைய போட்டியில் இருந்தது போல இருந்தது இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

இந்த காட்சிகள் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகாமல் ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Unseen Rahul Dravid Animated Video after India Pakistan | Sports News.