Naane Varuven D Logo Top

"கால்கள் இல்லாம போனாலும் நீதான் என் புருஷன்".. தடையை தாண்டி காதலனை கரம்பிடித்த பெண்.. ஒரே வாரத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Sep 29, 2022 07:52 PM

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரி என்னும் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரகாஷ். தொழில் கல்வி படித்துள்ள இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

woman married her lover and parents spilt their relationship

Also Read | டி 20 உலக கோப்பை : சிக்கலில் இந்திய அணி??.. வெளியான லேட்டஸ்ட் தகவலால் கவலையில் ரசிகர்கள்!!

இதனிடையே, பிரகாஷும் வள்ளியூர் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் திவ்யாவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே வேளையில், இவர்களின் காதலுக்கு பெரிய அளவில் இருவரின் வீட்டாரும் எதிர்ப்பு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் பிரகாஷ் வாழ்க்கையில் அரங்கேறி உள்ளது. சென்னையில் பணிபுரிந்து வந்த பிரகாஷ், தன்னுடைய இரு சக்கர வாகனம் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவரது இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. காதலனுக்கு இப்படி ஒரு துயரநிலை வந்த போதிலும், தனது காதலை கைவிடாமல் தொடர்ந்து பிரகாஷை காதலித்து வந்துள்ளார் திவ்யா. இதன் பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்ததாக கூறப்படும் நிலையில், இந்த திருமணத்திற்கு திவ்யாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

woman married her lover and parents spilt their relationship

இதனால், பிரகாஷ் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பிரகாஷ் மற்றும் திவ்யா ஆகியோர், பிரகாஷின் வீட்டில் வைத்தே திருமணம் செய்துள்ளனர். பிரகாஷின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணமும் நடந்ததாக கூறப்படுகிறது.

மகளுக்கு திருமணம் நடந்ததை கேள்விப்பட்ட திவ்யாவின் பெற்றோர், திருமணம் முடிந்து எட்டு நாட்கள் கழித்து பிரகாஷின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், பிரகாஷை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி பின்னர் அங்கிருந்து திவ்யாவை இழுத்துக் கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

woman married her lover and parents spilt their relationship

இதனைத் தொடர்ந்து காயமடைந்த பிரகாஷை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். மேலும், இந்த சம்பவம் பற்றி புகார் ஒன்றையும் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசும் பிரகாஷ், நாங்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தோம் என்றும் எனக்கு விபத்து ஏற்பட்ட பின்பும் திவ்யா அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து என்னை நன்றாக கவனித்துக் கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, அவரும் மனமுவந்து தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் என்றும், திவ்யாவின் பெற்றோருக்கு இது பிடிக்காமல் போனதால் இப்படி நடந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவிக்காக இளைஞர் போராடும் விஷயம், பலரையும் மனம் உடைய வைத்துள்ளது.

Also Read | "வாங்க Vibe பண்ணலாம்".. உச்சகட்ட பரவச நிலையில் தாத்தா.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு பாட்டு தாங்க காரணம்"..

Tags : #MARRIED #LOVER #PARENTS #RELATIONSHIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman married her lover and parents spilt their relationship | Tamil Nadu News.