"வாங்க VIBE பண்ணலாம்".. உச்சகட்ட பரவச நிலையில் தாத்தா.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு பாட்டு தாங்க காரணம்"..
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றைய காலகட்டத்தில், இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் செய்திகள், வித விதமாக வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.
Also Read | "எதுமே இன்னும் சரியா கிடைக்கல".. தஞ்சை கோவிலை எண்ணி ஆதங்கப்பட்ட ஆனந்த் மஹிந்திரா.. பின்னணி என்ன??
அது மட்டுமில்லாமல், அடிக்கடி ஏதாவது புது புது வார்த்தைகள் கூட பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் அங்கம் வகிப்பதை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில், 'Vibe' என்ற வார்த்தை குறித்து ஏராளமான மீம்ஸ்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பல விஷயங்கள், சமீப காலமாக அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அப்படி சமீபத்தில், Vibe என்ற வார்த்தைக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடிய ஒரு வீடியோ தான், பலரது கவனத்தை ஈர்த்ததுடன் மட்டுமில்லாமல், பார்ப்போரை கூட ஒருவித Vibe-ற்கே கொண்டு சென்றுள்ளது. சென்னையில் உள்ள பல இடங்களில், ஒரு குழு சென்று அங்கே மியூசிக் செட்டப் அமைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
மேலும், தெருவோரங்களில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சி, பொது மக்கள் பலரையும் ஈர்த்து அங்கே கூட்டம் போடவும் வைக்கும். அப்படி சமீபத்தில், சென்னையில் உள்ள தெருவோரம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்துள்ளது. ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா ஆகியோர் நடிப்பில், கடந்த 1961 ஆம் ஆண்டு, CV ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான தேன் நிலவு என்ற திரைபடத்தில், 'ஓஹோ எந்தன் பேபி" என்ற பாடல் வரும்.
இதனை அந்த இசைக் குழுவில் உள்ளவர்கள், பொது மக்கள் முன்னிலையில் பாடினார்கள். அந்த சமயத்தில் அங்கே நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், இசைக் குழு அருகே வந்து மக்கள் முன்னிலையில், பழைய பாடலுக்கு ஆட தொடங்கினார். நிச்சயம் அவரது இளமைக் காலத்தில் அதிகம் ரசித்த ஒரு பாடலாக இருக்கலாம் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதற்கு காரணம், அந்த அளவுக்கு பாடலுடன் தன்னை தொடர்பு படுத்தி, மிகவும் அசத்தலாகவே அந்த முதியவர் Vibe ஆகிக் கொண்டிருந்தார். பாடலின் வரிகளை வாயசைத்து, வரிகளுக்கு ஏற்ப அவர் ஆடியது தான் தற்போது இணையவாசிகள் பலரது லைக்குகளையும் அள்ளி வருகிறது.
Also Read | டி 20 உலக கோப்பை : சிக்கலில் இந்திய அணி??.. வெளியான லேட்டஸ்ட் தகவலால் கவலையில் ரசிகர்கள்!!