தம் வீட்டு பணியாளர் மீது காதலில் விழுந்த செல்வந்த பெண்.. உருக வைத்த காரணம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உன்னதமான காதல் இருந்து விட்டால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் வென்று விடலாம் என பலரும் கூறுவார்கள்.

பணம், அந்தஸ்து, ஜாதி, மதம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தாண்டி உண்மையுள்ள இரு மனங்களுக்கு இடையே உருவாகும் காதல் முன் மற்றது அனைத்தும் தூசு போல தான் தோன்றும்.
அந்த வகையில், அப்படி ஒரு உயர்ந்த காதலை வெளிப்படுத்தும் செய்தி தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அன்னி (Annie). பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவருக்கு பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்த போது அன்னிக்கு பிடிக்காமல் போயுள்ளது. செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது சொத்தின் மீது பேராசை கொண்டு தான் தன்னை அந்த மாப்பிள்ளை விரும்பியதையும் Annie உணர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது பெற்றோர்களிடம் இது பற்றி அன்னி தெரிவித்ததாகவும் அதனை அவர்கள் புரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வேறு சில மாப்பிள்ளை பார்த்த போதும் அவர்களும் பணத்தின் மீது தான் அதிக விருப்பம் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்கு மத்தியில், இசாயா கில் என்ற வாலிபரை அன்னியின் தந்தை தனது அலுவலகம் மற்றும் வீட்டில் உதவி செய்ய பணியாளாக வைத்துள்ளார். அப்படி இருக்கையில், இசாயாவின் பழக்க வழக்கங்கள், நடத்தை உள்ளிட்ட விஷயங்கள் அன்னியை ஈர்த்துள்ளது. அந்தஸ்து என்பதை தாண்டி இசாயாவின் குணத்தின் மீது காதல் வயப்பட்ட அன்னி, தனது காதலையும் நேரடியாக வெளிப்படுத்தி உள்ளார்.
தனது முதலாளியின் மகள் தன்னை காதலிப்பதை அறிந்ததும் நம்ப முடியாமல் அதிர்ச்சியிலே உறைந்து போயுள்ளார் இசாயா. யோசித்து முடிவை சொல்வதாக அன்னியிடம் தெரிவித்திருந்த இசாயா, இரண்டு நாட்களுக்கு பிறகு சம்மதம் சொல்லி உள்ளார். மேலும் தனது காதல் பற்றி தந்தையிடம் தயக்கத்துடன் அன்னி கூற, அவர் சம்மதம் சொன்னது ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது.
ஆனால், குடும்பத்தினர் சிலர் ஆரம்பத்தில் அன்னி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இறுதியில் அவர்களும் சமரசம் ஆக, அன்னி மற்றும் இசாயா ஆகியோர் திருமணம் சமீபத்தில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
பொருளாதார நிலை, அந்தஸ்து என்பதை தாண்டி குணம் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் பெண் ஈர்க்கப்பட்டதுடன் அவரது குடும்பத்தினரும் மகளின் விருப்பத்திற்கு எதிர்க்காமல் சம்மதம் சொன்ன விஷயம் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
Also Read | பறிபோன Finals வாய்ப்பு.. ஒரே ஒரு எமோஜி போட்டு KL ராகுல் பகிர்ந்த ஃபோட்டோ!!

மற்ற செய்திகள்
