விராட் கோலியை பாராட்டிய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்.. கொந்தளித்த ரசிகர்கள்! இதுதான் காரணமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்கி உள்ளது .
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மேல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் மற்றும் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சேஸிங்கை துவங்கியது. ஆரம்பத்திலேயே ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். அதன்பிறகு உள்ளே வந்த கோலி நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் அவுட்டாகி வெளியேற பாண்டியா உள்ளே வந்தார். இந்த இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதன் பலனாக இந்திய அணி வெற்றியை நோக்கி சீராக முன்னேறியது. கடைசி ஓவரின் முதல் பந்தில் பாண்டியா அவுட் ஆகினார். 40 ரன்கள் எடுத்திருந்த பாண்டியா வெளியேறிய நிலையில் உள்ளே வந்த தினேஷ் கார்த்திக், 1 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் அவுட் ஆகி ஷாக் கொடுத்தார்.
இதனால் மைதானமே பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது. இறுதி பந்தில் 2 ரன் எடுக்க வேண்டிய நிலையில் அஸ்வின், வீசப்பட்ட பந்தை வைட் வாங்க ஸ்கோர் சமன் ஆனது. அடுத்த பந்தில் எக்ஸ்டரா கவரில் அஸ்வின் ஒரு ரன் அடித்து கொடுக்க இந்தியா த்ரில் வெற்றிபெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் கோலி அபாரமாக ஆடி 82 ரன்கள் குவித்தார். 53 பந்துகளை சந்தித்திருந்த கோலி 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசினார்.
இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு காரணமான கோலியை உலகின் முக்கிய கிரிக்கெட் விமர்சனங்கள் முன்னாள் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷோயப் மாலிக் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு விராத் கோலியை பாராட்டியுள்ளார். அதில், "என்ன அற்புதமான ஆட்டத்தை நாம் இப்போது பார்த்திருக்கிறோம் & விராட் கோலி முற்றிலும் ஒரு பீஸ்ட்!!
ஒயிட் பால் கிரிக்கெட்டில் உலகின் வேறு எந்த வீரருடன் அவரை நீங்கள் ஒப்பிட முடியாது. அவரால் ஆங்கர் ரோல் (நிதானமான ஆட்டம்) செய்யலாம், ஸ்ட்ரைக்கை மாற்றி ஆடலாம் (ஒரு ஒரு ரன்னாக எடுப்பது), சிக்ஸர் அடிக்கலாம், ஆட்டத்தை எப்படி முடிப்பது என்பது அவருக்குத் (விராட் கோலி) தெரியும்!" என சோயப் மாலிக் ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட் தற்போது பாகிஸ்தான் ரசிகர்களால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மாலிக்கின் ட்விட்டை மறுபதிவு மற்றும் பின்னூட்டம் செய்து பல ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
- What a Game of cricket we've just witnessed & this guy Virat Kohli is absolutely a Beast!!
You can not compare his class to any other player in the world in white ball cricket. He can anchor, he rotates the strike, he can hit sixes and he knows how to finish the Game! pic.twitter.com/Ed349p0840
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) October 23, 2022