'உங்க வீடியோவ ஆபாச தளத்துல போட்டு இருக்காங்க'... 'வீட்டுக்குள்ள இருந்தது எப்படி போச்சு'... தலைசுற்ற வைக்கும் மெகா ஹேக்கிங்!
முகப்பு > செய்திகள் > உலகம்தொழில்நுட்பம் வளர வளர அதை எப்படி எல்லாம் தவறாகப் பயன்படுத்தலாம் என்பதும் கூடவே வளர்ந்து வருகிறது. அந்த வகையில் வீட்டினுள் சாதாரணமாக நடமாடும் வீடியோகளை ஆபாச தளத்தில் பதிவு செய்துள்ளது ஒரு கும்பல்.

சிங்கப்பூரில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஹேக் செய்து, அந்த வீடியோக்களை ஆபாச இணையத்தில் பதிவேற்றியுள்ளது ஒரு கும்பல். ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோக்கள் 20 நிமிடங்கள் முதல் தொடங்குகின்றது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் வீட்டில் சாதாரணமாக இருந்த பாலூட்டும் தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை பலரின் வீடியோ அந்த தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டினுள் இருக்கும் பலரும் பொதுவாக கேசுவலான உடைகளை அணிவதே வழக்கம். அப்படி இருக்கும் போது மேலாடைகளோடு வீட்டில் இருப்பது, ஆடைகளை மாற்றுவது குளியல் அறை மற்றும் படுக்கையறை காட்சிகள் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளது. ஒரு வீடியோவில் சிறுமி ஒருவர் வெள்ளை நிற டி-சர்ட்டுடன், வெறுமென உள்ளாடையோடு புத்தகங்களோடு அமர்ந்திருப்பது உட்பட வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் பொதுவாகப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லது குழந்தைகள், முதியவர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் செல்லப்பிராணிகளைத் தொலைவிலிருந்து கண்காணிக்க நிறுவப்பட்டுள்ள பொதுவான இணைய நெறிமுறை (ஐபி) கேமராக்களிலிருந்து இந்த காட்சிகள் திருடப்பட்டுள்ளன. இதனிடையே அந்த வீடியோகளை சேதனனைச் செய்தபோது ஐபி கேமராக்களை ஹேக்கிங் செய்ய ஒரு குழு ஒன்று இதன் பின்னால் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. சமூக செய்தி தளமான டிஸ்கார்டில் காணக்கூடிய இந்த குழுவில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1,000 உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களில் 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் 3TB க்கும் மேற்பட்ட கிளிப்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறுகின்றனர், இதற்காக அவர்கள் ஒரு முறை தவணையாக 150 அமெரிக்க டொலர் சந்தாவைச் செலுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. தாய்லாந்து, தென் கொரியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் வீடுகளின் கேமராவிலிருந்து இந்த காட்சிகள் திருடப்பட்டுள்ளன.
இதனிடையே செக் பாயிண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸிற்கான ஆசிய-பசிபிக் தீர்வுக் கட்டிடக் கலைஞரான கிளெமென்ட் லீ, கூறும்போது, ''உங்கள் கேமரா பாதுகாப்பானது என ஒருபோதும் கருத வேண்டாம். ஹேக்கர்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் பகிர்வதைத் தவிர்ப்பதுதான்'' என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே திருடப்பட்ட காணொளிகளில் சிறார்களும் இடம்பிடித்துள்ளார்கள் என்பதால் இது சிறார்களாக்கு எதிரான பாலியல் குற்றங்களில் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
