'அபார்ட்மெண்ட்' பக்கத்துல 'ரத்த' வெள்ளத்தில் இறந்து கிடந்த 'செக்யூரிட்டி',,.. கார்ல வந்த அந்த 'பொண்ணு',,, 'சிசிடிவி'யில் தெரிய வந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சாந்தோம் பகுதியை அடுத்த பட்டினம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருபவர் சிவப்பிரகாசம் (68).

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், அந்த குடியிருப்பின் அருகே சிவப்பிரகாசம் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக, போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடியிருப்பில் வசிக்கும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் 18 வயது மகள் ஒருவர் அவர் மீது கார் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது.
அந்த பெண், தனது ஆடி காரை பார்க்கிங் லாட்டில் நிறுத்தும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதே வேளையில், சிவப்பிரகாசம் கார் ஏறிய போது போர்வை போர்த்தி தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். செக்யூரிட்டி மீது கார் ஏறியதை தான் உணரவில்லை என்றும், அவரது உடலை கவனிக்காமல் வழக்கம் போல காரை பார்க் செய்து விட்டு தனது வீட்டிற்கு சென்றதாகவும், அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கார் பார்க்கிங் பகுதியில் நுழைவதற்கு முன் காரின் ஹெட் லைட்டை அணைத்து வைத்திருந்ததால் சிவபிரகாசம் அங்கு தூங்கி கொண்டிருந்ததை இளம்பெண் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். அதே போல, அழுகை குரலையும் எதையும் கூட இளம்பெண் காரை விட்டு இறங்கிச் செல்லும் போது கேட்கவில்லை என தெறிவித்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக, இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பெயிலில் வெளியே வந்துள்ளார். மேலும், அவரிடம் டிரைவிங் லைசென்சும் இருந்துள்ளது. சிவப்பிரகாசம் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
