"ஹேக்கிங் குழு... உளவுத்துறை கூட்டணி"!? கொரோனா தடுப்பூசி விவரங்களை திருடியதா ரஷ்யா?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பூசி விவரங்களை திருடியதாக கூறிய இங்கிலாந்தின் குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்துள்ளது.
இங்கிலாந்து கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்து இருந்தது. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துதான் முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது
இந்நிலையில், ரஷியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து சமீபத்தில் குற்றச்சாட்டியது. சர்வதே அளவில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின் இங்கிலாந்தின் குற்றச்சாட்டை நிராகரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "ஹேக்கிங் குழுவை ரஷ்ய உளவுத்துறையுடன் இணைத்து உருவாக்கியுள்ள இந்த கதையை நான் நம்பவில்லை. இது அர்த்தமற்றது.
அதே போல் பிரிட்டன் தேர்தலிலும் நாங்கள் சிறிதும் தலையிடவில்லை. இரு நாட்டு உறவில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவும், சிறந்த உறவை ஏற்படுத்தவும் முயற்சிப்போம். பிரிட்டனுடன் வணிகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.