‘பல கனவுகளுடன் வந்த திருடன்!’.. அரண்டு போய் ஓடிய மொத்த நகைக்கடை ஊழியர்கள்!.. ‘புயலாக வந்த ஒரே ஒரு பெண் ஊழியர்!’.. தரமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் நகைக்கடையில் அரிவாளைக் காட்டி ஒருவர் கொள்ளையடிக்க முயன்றபோது துணிச்சலான பெண் ஊழியர் அவனை ஓட ஓட விரட்டிய காட்சி சிசிடிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் சிக்மங்களூரு மாவட்டம் சிறுங்கரியைச் சேர்ந்த நாகப்பச் செட்டி என்பவருக்கு சொந்தமான நகைக்கடைக்குள் முகக்கவசம் அணிந்துவந்த மர்ம நபர் அந்த நகைக்கடைக்குள் நுழைந்து பெண் ஊழியர்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி நகைகளை கொள்ளை அடிக்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த பெண் ஊழியர்கள் அச்சத்தில் வெளியே ஓட, ஒரே ஒரு பெண் ஊழியர் மீதும் நாற்காலியைத்தூக்கி அந்த அரிவாள் கொள்ளையனின் மீது ஓங்கி அடித்தார். எனினும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தப்பி ஓடிய கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர். அதே சமயம், பெண் ஊழியரின் தைரியத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியதாகக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
