'பத்த வச்சிட்டியே பரட்ட'... 'எலி செஞ்ச வேலையால் ஒரு கோடி ரூபாய் நஷ்டம்'... சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்து போன ஓனர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 21, 2020 03:56 PM

ஒரே ஒரு எலியால் கார் சர்வீஸ் உரிமையாளர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்பதை நம்ப முடிகிறதா?. ஆம் அப்படி ஒரு சேதாரத்தைத் தான் எலி ஒன்று ஏற்படுத்தியுள்ளது.

Rat Set A Hyderabad Office On Fire Causing Rs 1 cr Loss

ஹைதராபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல கார் சர்விஸ் நிறுவனம் ஒன்றில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 3 கார்கள் எரிந்து நாசமானது. மின்கசிவால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் 6 மாதங்கள் கழித்து விபத்து எப்படி ஏற்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த தகவல் தான் தற்போது பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பலரின் அதிர்ச்சிக்குக் காரணம் ஒரே ஒரு எலி தான். ஏனென்றால் அந்த தீ விபத்திற்குக் காரணமாக இருந்தது அந்த எலி. தீ விபத்து நடந்த நாளன்று பதிவான சிசிடிவி காட்சிகளைத் தனியார் தடயவியல் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்ததில் இச்சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் பூஜை ஒன்றை நடத்தியுள்ளனர். அதற்காக அகல் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் அலுவலகம் மூடப்படும் போது ஒரேயொரு அகல் விளக்கு மட்டும் அணைக்காமல் இருந்து உள்ளது.

Rat Set A Hyderabad Office On Fire Causing Rs 1 cr Loss

நள்ளிரவில் அந்த அகல் விளக்கு அருகே வந்த எலி ஒன்று அந்த விளக்கை எடுத்துக் கொண்டு சென்றதாகத் தெரிகிறது. எரியும் விளக்கைத் தூக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அந்த எலி ஒரு கம்ப்யூட்டர் சேர் மீது போட்டுவிட்டது. இதனை அடுத்து அந்த சேர் தீப்பிடித்து, அதன் பின்னர் அந்த பகுதி முழுவதும் தீ பிடித்தது. முதலில் முதல் மாடியில் மளமளவென்று பரவிய தீ, அதன் பின்னர் தரை தளத்திலும் பரவி ஒட்டுமொத்த அலுவலகத்தையும் தீக்கிரையாக்கி விட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியை ஆய்வு செய்த போது தெரியவந்துள்ளது. இதை பார்த்த கார் சர்விஸ் சென்டரின் உரிமையாளர் ஆடிப் போனார்.

இதையடுத்து மின் கசிவால் இந்த விபத்து ஏற்படவில்லை என்பதும், ஒரு எலியால்தான் இந்த தீ விபத்து நடந்துள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கார் சர்வீஸ் சென்டர் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rat Set A Hyderabad Office On Fire Causing Rs 1 cr Loss | India News.