‘பெர்சனல் டேட்டாக்கள் பத்திரம்!’.. கூகுள் டிரைவ்க்கு இப்படி ஒரு ஆபத்தா? - ‘திடுக்கிடும்’ தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கூகுள் நிறுவனத்தின் ஆன்லைன் சேமிப்பு சேவைதான் கூகுள் டிரைவ்.
![Hackers installs malware and misuse Google Drive Hackers installs malware and misuse Google Drive](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/hackers-installs-malware-and-misuse-google-drive.jpg)
இந்த சேவையில் பயனாளிகள் தங்களது கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் பிறருக்கு பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சேவையில் சில குறைபாடுகள் இருப்பதாக தற்போது கருத்துகள் எழுந்துள்ளன.
அதற்குக் காரணம், ஹேக்கர்கள் பயனாளர்களின் கூகுள் ட்ரைவ் கணக்கில் நுழைந்து மால்வேர்களை நிறுவுவதற்கு வாய்ப்புள்ளதாக பல கருத்துக்கள் எழுந்துள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் பயனாளர்களின் கணக்குகளை ஹேக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இவ்வாறு செய்வதனால், பயனாளர்களின் தகவல்களையும் ஹேக்கர்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் கோப்புகள் பகிரப்படும் போது அவற்றுடன் சேர்ந்து மல்வேர்களும் பரவக் கூடிய ஆபத்துக்கள் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)