டேட்டிங் ஆப்பில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ‘பாடி மசாஜ்’ செய்ய சென்ற இளைஞர்.. அப்பார்ட்மென்ட் கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > உலகம்டேட்டிங் ஆப் மூலம் மசாஜ் செய்ய சென்ற இந்திய இளைஞருக்கு துபாயில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
துபாயில் ஆன்லைன் டேட்டிங் ஆப் ஒன்றில், அழகான பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய விளம்பரத்தில் பாடி மசாஜ் செய்யப்படும் இருந்துள்ளது. அதில் ஒரு செஷனுக்கு 200 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.3,950) மட்டுமே வசூலிக்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்துள்ளது. இதைப் பார்த்த துபாயில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விளம்பரத்தில் குறிப்பிட்ட செல்போனை நம்பரை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது மறுமுனையில் பேசிய பெண் ஒருவர், Al Refaa என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு கூறியுள்ளார். உடனே இதை நம்பி அப்பெண் சொன்ன இடத்துக்கு இந்த இளைஞர் சென்றுள்ளார். அங்கு சென்ற பின்தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அந்த குடியிருப்பில் 4 ஆப்பிரிக்க பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர். உடனே அவர்கள் அந்த இளைஞரின் கழுத்தில் கத்தியை வைத்து தங்களது வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்குமாறு மிரட்டியுள்ளனர். அந்த நேரத்தில் மற்றொரு பெண் அவரது கிரெட் கார்டை எடுத்து அதிலிருந்த 30,000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 5,92,586) பணத்தை எடுத்துள்ளார்.
ஒரு நாள் முழுவதும் அந்த இளைஞரை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். மேலும் அவரை அடித்து மிரட்டி 2,50,000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.49,38,219) பணத்தை பல்வேறு வங்கிகளுக்கு மாற்றியுள்ளனர். கடைசியாக அவரிடமிருந்த ஐபோனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இதனை அடுத்து உடனே காவல் நிலையம் சென்று இதுதொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நைஜீரியாவைச் சேர்ந்த 3 பெண்களை ஷார்ஜாவில் வைத்து துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர். ஆன்லைன் டேட்டிங் விளம்பரத்தைப் பார்த்து பாடி மசாஜ் சென்ற இந்திய இளைஞர் துபாயில் பணத்தை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.