சார் உங்க ‘WHATSAPP-க்கு’ ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன்.. உடனே போனை கட் செய்த ‘இளம்பெண்’.. சென்னை தொழிலதிபருக்கு நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தொழிலதிபரை மிரட்டி 2 இளம்பெண்கள் 34 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் வெங்கடேசன். இவர் கடந்த 2019ம் ஆண்டு வேலை விசயமாக பெங்களூருக்கு சென்றுள்ளார். அப்போது ஹோட்டல் ஒன்றில் சுகன்யா என்ற பெண்ணுடன் அவர் தங்கியுள்ளார். அந்த சமயம் வெங்கடேசனுடன் தனிமையில் இருந்ததை சுகன்யா மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனை அடுத்து அந்த வீடியோவை வெங்கடேசனிடம் காட்டிய சுகன்யா, சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டி பறித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் நந்தினி என்ற பெண், வெங்கடேசனை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ‘உங்கள் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ அனுப்பியுள்ளேன். அதை பாருங்கள்’ எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அதில், ஹோட்டலில் சுகன்யாவுடன் தனிமையில் இருந்த வீடியோ இருந்துள்ளது. இதனை அடுத்து மீண்டும் வெங்கடேசனை தொடர்பு கொண்ட நந்தினி, ரூ.20 லட்சம் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் ரூ.14 லட்சம் கொடுத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து நிரேஷ் என்பவருடன் சேர்ந்து சுகன்யா, நந்தினி ஆகியோர் மீண்டும் வெங்கடேசனை தொடர்புகொண்டு ரூ.80 லட்சம் வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் நொந்துபோன வெங்கடேசன் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நிரேஷ், சுகன்யா, நந்தினி ஆகிய மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
