"கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு... வீட்டுலயே சேத்து வெச்ச '5' லட்ச ரூபா... 'திடீர்'னு 'பெட்டி'ய திறந்து பாத்துட்டு,,. உடைந்து அழுத 'வியாபாரி'... "யாருக்கும் இப்டி ஒரு நெலம வரக் கூடாது!!"
முகப்பு > செய்திகள் > இந்தியாதான் சிறுக சிறுக சேமித்த பணம், கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத அளவில், இழந்ததால் பேரதிர்ச்சிக்குள் ஆகியிருக்கிறார் வியாபாரி ஒருவர்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மைலாவரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலி ஜமாலையா. இவர் அப்பகுதியில் பன்றி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வங்கி கணக்கு எதுவுமில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, பன்றி வியாபாரம் மூலம் தனக்கு கிடைக்கும் லாபத்தை மனைவியிடம் கொடுத்து தனது வீட்டிலுள்ள இரும்புப் பெட்டி ஒன்றில் சேகரித்து வைத்துள்ளார். சொந்தமாக வீடு ஒன்றை கட்ட வேண்டும் என்பது தான் ஜமாலையாவின் ஆசை.
இதற்காக, சுமார் 5 லட்சம் பணத்தை இரும்பு பெட்டியில் சேமித்து வைத்திருந்த நிலையில், சில நாட்களாக அதனை அவர் திறந்து பார்க்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், சமீபத்தில் இரும்பு பெட்டியை திறந்து பார்த்த போது, அதிலிருந்த 5 லட்சம் பணத்தையும் கரையான்கள் அரித்து விட்டதை பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே ஜமாலையா சென்றுள்ளார்.
சொந்த வீடு என்ற கனவுக்காக, தான் கஷ்டப்பட்டு சேமித்த பணம் பாழாய் போனதைக் கண்டு, மிகவும் மன வேதனையடைந்து கதறி அழுதுள்ளார் ஜமாலையா. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெரிய வர, இவ்வளவு பெரிய பணம் பயனில்லாமல் போனதை எண்ணி கலங்கினர்.
வங்கி கணக்கு தொடங்கி, பணத்தை சேமித்து வைக்க முடியாமல், வீட்டிலேயே பணத்தை வைத்துக் கொண்டு, அதனை கரையான்களால் இழக்க நேரிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
