'கடுகளவு ஈவு இரக்கம் இல்லாமல்...' 'சுத்தி நின்னு அடிச்சு கொடுமைப்படுத்த...' 'தோளில உறவினரை சுமந்து சென்ற பெண்...' - உள்ளத்தை நொறுங்க செய்யும் கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊர் மக்கள் விரட்ட பெண் ஒருவர், தன்னுடைய உறவினரை தோளில் சுமந்துக்கொண்டு 3 கிலோமீட்டர் நடந்த கொடூர சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் குணா பகுதியில் இருக்கும் சாகாய் மற்றும் பான்ஸ் கெடி கிராமங்களுக்கு இடையே இருக்கும் பகுதியில், பெண் ஒருவர், ஒரு நபரை தோளில் சுமந்து கொண்டு நடந்து கொண்டிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஊர் மக்கள் அனைவரும் குச்சிகள் மற்றும் மட்டைகளால் அடிப்பதாகவும், வேகமாக நட என கூறி விரட்டுவதாகவும் பதிவாகியுள்ளது.
இந்த கொடூரமான சம்பவம் குறித்து பதிவு செய்துள்ள பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் அறிக்கையில், காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில், பாதிக்கப்பட்ட பெண்மணி சில மாதங்களுக்கு முன்பு பரஸ்பர உடன்படிக்கைக்குப் பிறகு கணவனிடமிருந்து பிரிந்ததாகவும், அதன் பின் தன் வாழ்க்கை துணையாக மற்றொரு நபருடன் உறவு கொண்டதாக கூறப்படுகிறது.
அதை பொறுக்க முடியாத முன்னாள் கணவர் மற்றும் பிற கிராமவாசிகளின் குடும்ப உறுப்பினர்களால் இந்த கொடூர சம்பவம் நடத்தபட்டுள்ளது. மனிதர்களை அடிமை போல நடத்தும் மிருக குணம் படைத்த மக்கள் இருப்பதற்கு சான்றாக இந்த சம்பவம் நடந்துள்ளது

மற்ற செய்திகள்
