'பிரபல 'PLAY BOY' மாடல் கொடுத்த போஸ்'... 'நெட்டிசன்கள் இப்படியா சொல்லணும்'... கடுப்பான மாடல் சொன்ன பதிலடி!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிளேபாய் மாடலான லுயானா சேன்டியன் (Luana Sandien) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

துபாய் பாலைவனம் பகுதியில் வைத்து போட்டோஷுட் ஒன்றை லுயானா நடத்தியுள்ளார். இதில் அரை நிர்வாணமாக தோன்றும் லுயானா, கால்சட்டை ஒன்றை அணிந்து கொண்டு தலையில் துணி ஒன்றைக் கட்டிக் கொண்டுள்ள நிலையில், தனது மார்பகம் பகுதியை மட்டும் கையால் மறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் பலர் வரவேற்பு அளித்தாலும், மேலும் பலர் அவரை 'ஆபாசம்' என குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், துபாய் நாட்டின் சட்ட திட்டங்களை அவர் சரியாக பின்பற்றி தான் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் கடுமையாக தன்னை மிரட்டுவதாகவும் லுயானா தெரிவித்துள்ளார்.
'நான் எடுத்த புகைப்படங்களிலேயே இது தான் மிகவும் சிறந்த, எனக்கு பிடித்தமான புகைப்படம். நான் இந்த புகைப்படத்தை பதிவிட்டு யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. அந்த நாட்டில் நிர்வாணமாக இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பதையறிந்த நான், கைகளைக் கொண்டு எனது மார்பகங்களை மறைத்து தான் புகைப்படங்களை பதிவிட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது?. இருந்த போதும், என்னை பலர் கடுமையாக அச்சுறுத்தி மிரட்டி வருகின்றனர்' என தான் செய்ததில் தவறில்லை என்பதில் தீர்மானமாக இருக்கும் லுயானா, தன்னை வெறுப்பவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்.
முன்னதாக, இவர் புகைப்படத்தை பதிவிட்டதுமே, 'நிர்வாணமாக போஸ் செய்ததற்கு ஏன் இன்னும் இவரை கைது செய்யாமல் இருக்கின்றனர்?' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த லுயானா, 'நான் விரும்பியதை அவர்கள் செய்ய அனுமதித்தார்கள்' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
