அடேங்கப்பா...! 'இது புது உருட்டால இருக்கு...' 'இந்த கருப்பு தாளை இப்படி பண்ணாலே போதும்...' '2000 ரூபாய் நோட்டா மாறிடும்...' - வேற லெவல் தில்லாலங்கடி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உசிலம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த காரை சோதனையில் ஈடுபட்டுள்ளார் வத்தலக்குண்டு சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்.

அப்போது அந்த காரில் கட்டுக்கட்டாக கருப்புத் தாள்களும், பிளாஸ்டிக் பேரல் ஒன்றும் இருந்துள்ளன. கருப்பு காகிதங்களை குறித்து விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த பிளாஸ்டிக் பேரலைத் திறந்து பார்த்தபோது, அதில் சில 2000 ரூபாய் நோட்டுகள் மிதந்துக் கொண்டிருந்தன.
விசாரணையில் அந்த நபர் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த நல்லமலை எனவும், அவர் தான் வைத்துள்ள கருப்பு காகிதத்தைத் தானே தயாரித்த திரவத்தில் நனைத்து எடுத்தால் 2000 ரூபாய் நோட்டாக மாறும் எனக் கூறி பலரை ஏமாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில் நல்லமலை இம்மாதிரியான ஏமாற்று வேலையில் ஈடுபடும் போது, அனைவரும் நம்பும் விதமாக ஏற்கனவே அந்தத் திரவ பேரலில் ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுகளைப் போட்டு வைத்து விடுவாராம். தன்னை நம்பி வருபவரிடம் கருப்பு காகிதத்தைத் திரவத்தில் மூழ்கி எடுப்பது போல் உள்ளே விட்டுவிட்டு, ஏற்கனவே தான் போட்டு வைத்திருந்த ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டை எடுத்து கையில் கொடுத்து விடுவாராம்.
இன்றும் ஒரு கும்பலுடன் பேரம் பேச்சுவார்த்தைக்காக செல்லும் போதுதான் மாட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதையடுத்து காவல் துறையினர் கட்டுக்கட்டாக கருப்பு காகித நோட்டுகளையும், அவர் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மற்ற செய்திகள்
