‘இப்படி கடத்துறது இதுதான் முதல்தடவை’.. மாத்திரை மாதிரி செஞ்சு விழுங்கிய பெண்கள்.. சென்னை விமானநிலையத்தை அதிரவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை நூதன முறையில் கடத்திய பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள் சிலர் தங்கக்கடத்தில் ஈடுபடுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது திருச்சியைச் சேர்ந்த கனகவல்லி (56), நிஷாந்தி (30), கலா பிரதீப்குமார் (53), ஜெயராஜ் (55), புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (37), கபார்கான் (52) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஹக்கீம் (25), தஸ்லீம் பாத்திமா (34) ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், தங்கக் கடத்தல் குருவிகளாக செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களை சோதனை செய்ததில், தங்கப்பசையை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அவற்றின் மீது பாலித்தீன் பேப்பரை சுற்றி மாத்திரை போல விழுங்கியுள்ளனர். அந்த தங்க மாத்திரைகள் வயிற்றில் சென்று பெருங்குடலில் நின்று கொள்ளும். வீட்டிற்கு வந்த பின்னர் வாழைப்பழம் உள்ளிட்டவற்றை உண்டு அவற்றை வெளியே எடுத்து விடுகின்றனர்.
இதனைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 8 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு 4 கிலோ எடையுள்ள சுமார் 2 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள தங்க மாத்திரைகள், செயின், மோதிரம் ஆகியவை மீட்கப்பட்டன. இதுபோன்று தங்கப்பசையை மாத்திரை போல் உருட்டி வயிற்றுக்குள் வைத்து கடத்தி வருவது இதுவே முதல்முறை என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
