VIDEO 'பைக்ல' மோதி.. 'கார்ல' அடிபட்டும்.. பயபுள்ளைக்கு 'ஒண்ணும்' ஆகலையே!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Manjula | Nov 18, 2019 04:32 PM

சிலருக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டாலும் கூட பயப்படும்படியாக ஒன்றும் இருக்காது. சட்டென எழுந்து தூசு தட்டுவது போல தட்டிவிட்டு  விட்டு சென்று விடுவார்கள். அதேபோல நாய் ஒன்றுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Bike and car collided in succession Dog, watch video

பயங்கர சேட்டையான நாய் ஒன்று ரோட்டினை கடக்க நினைத்து சட்டென தாவுகிறது. ஒரு பைக்கின் மீது மோதி ரோட்டில் விழுகிறது. தொடர்ந்து தன்னுடைய முயற்சியை மீண்டும் தொடர்ந்து டாடா சுமோ ஒன்றின்மீது மோதுகிறது.

வீல்களுக்குள் சிக்கி சிலபல சாகசங்களுக்கு பின் எழுந்து ஓடுகிறது. ஆனால் அதன் உடம்பில் எந்த பிரச்சினையும் இன்றி நன்றாக தான் இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள், பயபுள்ளைக்கு ஆயுசு கெட்டி என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Tags : #ACCIDENT