'மூணு' வாரமா வீட்ட விட்டு வெளிய போகல ... ஆனாலும் கொரோனா 'பாசிட்டிவ்' ... அமெரிக்க பெண்ணுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! ... காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Apr 12, 2020 10:39 AM

அமெரிக்காவின் சார்லொட்டே நகரை சேர்ந்தவர் ரேச்சர் ப்ரமெர்ட். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு திடீரென காய்ச்சல், தலைவலி மற்றும் மூச்சுத்திணறல் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா உள்ளதா என்ற சந்தேகத்தின் பெயரில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman from America who test Corona Positive who in home

இதுகுறித்து ரேச்சர் கூறுகையில், 'கடந்த மூன்று வாரங்களில் எனது கணவர் டோர் டெலிவெரி செய்யும் பெண்,  மூன்று நபர்களை மட்டுமே சந்தித்துள்ளேன். மூன்று வாரத்திற்கு முன்னதாக நான் மருந்தகம் சென்றதே வீட்டை விட்டு வெளியேற கடைசி தினம். மூன்று வாரங்கள் வெளியில் எங்கும் செல்லாமல் இருந்த போதும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக ஃப்ளு மூலமும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரேச்சர் வீட்டிற்கு டோர் டெலிவரி செய்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரை ஒரு முறை கூட தொட்டது இல்லை என ரேச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் டெலிவரி செய்த பொருட்களை க்ளவுஸ் இல்லாமல்  கையால் தொட்டுள்ளார். இதனால் வைரஸ் பரவி இருக்கலாமா என அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.