'மனித சடலம் தான் உரம்'...'அமோக விளைச்சலுக்கு பின்னாடி இருக்கும் கோரம்'...நடுங்க வைக்கும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த செய்தியை படிப்பவர்கள் உலகத்தில் இப்படி கூட நடக்கலாமா என, நம்முடைய கற்பனைக்கு அப்பால், நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாத நிகழ்வு தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த உலகில் தனி ஒரு உலகமாக இயங்கி வரும் நாடு தான் வட கொரியா. அந்த நாட்டில் சர்வாதிகாரியாக செய்யப்பட்டு வருபவர் கிம் ஜாங்-உன். அங்கு சமீபத்தில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் அமோக விளைச்சலை கண்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்த நிலையில், அந்த விளைச்சலுக்கு பின்னால் ஒளிந்து இருக்கும் பயங்கரமான காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் கெய்கோன் வதை முகாமில் இருந்து, கிம் இல் என்ற புனைப்பெயரை கொண்ட கைதி தப்பினார்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள தகவலில், ''வடகொரியா நிலங்கள் அதிக உரமூட்டப்பட்டவை மற்றும் விவசாயம் அங்கு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம், விளை நிலங்களில் புதைக்கப்பட்ட மனித உடல்கள் அங்கு இயற்கை உரங்களாக செயல்படுகின்றன. அதற்கு உதாரணமாக அவர் வெளியிட்டுள்ள மற்றோரு தகவல், நெஞ்சை நடுங்க செய்யும் அளவுக்கு உள்ளது.
ஒரு குழந்தை மலைகளில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார். ஏனெனில் புதைக்கும்போது அவர்கள் அதை சரியாக மறைக்க மறந்துவிட்டார்கள் எனக் கூறியுள்ளார். மலைகளில் புதைக்கபடுபவர்களில் பெரும்பாலானோர் வட கொரியாவின் அரசியல் எதிரிகள் ஆவார்கள். முன்னதாக இதேபோன்ற குற்றசாட்டை தென் கொரியாவின் சியோலுக்கு தப்பிச் சென்றபின், வட கொரியாவில் உள்ள மனித உரிமைகளுக்கான குழுவுக்கு ஒரு பெண் தனது அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தனது ஏவுகணை சோதனைகளை முடுக்கிவிட்ட கிம், மக்களுக்கு எதிராக எவ்வளவு கொடூரங்கள் அங்கு நடக்கின்றன என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் உதாரணம் என சர்வதே மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.