''எங்களுக்குதான் அதிக பாதிப்பு, அதனால''.. 'கொரோனா' நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் 'அமெரிக்காவால்'... மற்ற 'உலக' நாடுகள் சிரமப்படுகிறதா?
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா, இத்தாலியை அடுத்து அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. கடுமையான சூழல் காரணமாக அமெரிக்காவில் முகக்கவசங்கள் மற்றும் வெண்டிலேட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்த தட்டுப்பாடுகளை சமாளிக்க அமெரிக்கா, மற்ற நாடுகளுக்கு கிடைக்கப்படும் மருத்துவ சேவையை அதிகம் பணம் கொடுத்து தங்களது பக்கம் திருப்பிக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் இருந்து முகக்கவசங்கள் உள்ளிட்ட எந்த மருத்துவ உபகரணங்களும் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய பல மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவால் தடுக்கப்பட்டு அவர்களே அபகரித்து கொள்வதாக பல்வேறு நாடுகள் அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
பல நாட்டு அதிபர்கள் அமெரிக்காவின் இந்த செயல் கவலையளிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு தேவைப்படும் கொரோனா மருத்துவக் கருவிகள் வந்து சேர தாமதம் ஆவதற்கும் அமெரிக்காவின் இந்த செயல் தான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தங்களது நாட்டின் மருத்துவ தேவைகளுக்காக மற்ற நாடுகளின் மருத்துவ தேவைகளை தடுப்பது மிகவும் தவறான செயல் என அமெரிக்க நிபுணர்களே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.