'அம்மா இருக்கேன்பா.. விட்ருவேனா'.. 2 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி.. கலங்க வைத்த பெற்றோரின் செயல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 06, 2019 12:37 PM

டெக்ஸாஸ் மாகாணத்தின் பரபரப்பான வணிக வளாகங்களுக்குள் நுழைந்த பேட்ரிக் என்பவர், கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சரமாரியாக சுட்டுத் தள்ளினார்.

Mother and Father Dead to Save baby in Texas shooting

அவரது துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டாக்களுக்கு 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 26 பேர் காயம் காரணமாக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக பெட்ரிக் ஒரு கடிதம் எழுதியதாகவும், அதில், அமெரிக்க குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால், டெக்ஸாஸில் குடியேற்றங்கள் நிகழக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில், தனது 2 மாதக் குழந்தையை, குழந்தையின் அம்மா ஜோர்டன் மற்றும் அப்பா ஆண்ட்ரோ இருவரும் காப்பாற்றிவிட்டு, அவர்கள் இறந்துவிட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. அதிலும் துப்பாக்கிச் சூட்டின்போது, ஜோர்டன் தன் குழந்தையை தனது மடியில் வைத்துக்கொண்டு சுருண்டுகொண்டுள்ளார்.

தனது மனைவி, குழந்தை மீது துப்பாக்கிக் குண்டு துளைத்துவிடக் கூடாதென ஆண்ட்ரோ அவர்களை அணைத்தபடி காத்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டமாக அப்பா, அம்மா இருவர் மீதும் குண்டு பாய்ந்தது. அம்மாவின் ரத்தக் கறையுடன், தாய்தந்தையரை இழந்த குழந்தையின் அழுகை அங்கிருந்தவர்களின் நெஞ்சை பிழிந்துள்ளது.

Tags : #GUN #SHOOT #DEAD #SAD #FATHERANDMOTHER