'தலையில் பலமாக பட்ட பந்து'.. 'இப்படியா நடக்கனும்'.. சோகத்தில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Aug 16, 2019 05:49 PM
கிரிக்கெட்டில் நடக்கும் அரிதான சம்பவமாக, பந்தோ, கிரிக்கெட் பேட்டோ வீரர்களுக்கும் அம்பயருக்கும் காயத்தை ஏற்படுத்தும். அப்படியான சோக சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

ஆம், பெம்ப்ரோக் மற்றும் நார்பெர்த் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த டிவிசன் போட்டிக்கு அம்பயரிங் செய்தவர் ஜான் வில்லியம்ஸ். பெம்ப்ரோக்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் அம்பயரான இவர் செய்து கொண்டிருந்த போது, இந்த டிவிசன் போட்டியில் அம்பயரிங் செய்துகொண்டிருந்தபோது பந்து தாக்கி தலையில் அடிபட்டது.
இதனால் அனைவரும் பதற்றமாகினர். பின்னர் மைதானத்திலேயே அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு கார்ஃப்டில் இருந்த வேல்ஸ் யுனிவர்ஸிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குதான் அவர் தலையில் பந்து தாக்கியதால் அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றதாக அறிவிக்கப்பட்டது.
80 வயதிலும் ஆக்டிவாக களத்துக்கு வந்து பணியில் நின்ற ஜான் வில்லியம்ஸ்க்கு, ஒரு மாதத்துக்கு முன் தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்ததும், ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி மரணித்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளதும் கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Sad news this morning regarding umpire John Williams.
John passed away this morning with his family at his bedside. Thoughts of all of Pembrokeshire Cricket are with Hilary and the boys at this difficult and sad time
— Pembrokeshire Cricket 🏏 (@PembsCricket) August 15, 2019
