இனி ‘சிக்னல்’ இல்லாமலும் ‘போன்’ பேசலாம்... ‘அசத்தல்’ வசதியை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம்...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Dec 12, 2019 04:09 PM

ஏர்டெல் நிறுவனம் சிக்னல் இல்லாமலும் போன் பேச உதவும் Wifi Calling என்ற அசத்தல் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

Airtel WiFi Calling Feature Available Now Details Inside

போட்டி காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதற்காக அந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் Wifi Calling என்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த வசதி மூலமாக போன் நெட்வொர்க் இல்லாமல் Wifi உதவியுடனேயே வாடிக்கையாளர்கள் ஒருவருடைய செல்போன் என்ணிற்கு அழைத்துப் பேச முடியும்.  இந்த வசதியை ஐபோன் 6s மற்றும் அதன்பின் வந்த அனைத்து ஐபோன்களிலும் உபயோகிக்க முடியும். மேலும் இந்த வசதியை ரெட்மி K20, ரெட்மி K20 ப்ரோ, போகோ F1, சாம்சங் J6, சாம்சங் A10s, சாம்சங் On6, சாம்சங் M30s, ஒன்ப்ளஸ் 7, ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, ஒன்ப்ளஸ் 7T, ஒன்ப்ளஸ் 7T ப்ரோ ஆகிய போன்களிலும் பயன்படுத்த முடியும்.

இந்த போன்களில் லேட்டஸ்ட் ஓ.எஸ் அப்டேட் செய்தபின், போன் செட்டிங்ஸில் சென்று இந்த வசதியை ஆக்டிவேட் செய்தால் போதும்.  இந்த வசதியைப் பயன்படுத்தும்போது VoLTE வசதியையும் ஆன் செய்து வைத்துக்கொண்டால் Wifi-ல் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அழைப்பு மீண்டும் 4G-யுடன் தானாகவே கனெக்ட் ஆகிக்கொள்ளும்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் மூலம் மட்டுமே தற்போது வேலை செய்யும் இந்த வசதியை விரைவில் அனைத்து Wifi கொண்டும் பயன்படுத்தமுடியும். தற்போது டெல்லி NCR டெலிகாம் வட்டத்தில் மட்டும் கிடைக்கும் இந்த வசதி விரைவில் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோவும் இந்த வசதியை விரைவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags : #AIRTEL #JIO #VODAFONE #BSNL #WIFI #CALL #FEATURE #IPHONE