‘இத’ மட்டும் பண்ணா போதும்... ‘பிரபல’ நிறுவனத்தின் பழைய ‘கட்டணத்திலேயே’ தொடரலாம்... வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Dec 20, 2019 06:18 PM

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சலுகைகளை பழைய கட்டணத்திலேயே பெறுவது எப்படி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tariff Protection Jio Users Can Avail Old Prepaid Recharge Plans

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக அறிவித்த ஆல்-இன்-ஒன் பிரீபெய்ட் சலுகையில் அதன் விலை 40 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, அதற்கான பலன்கள் 300 சதவிகிதம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஜியோ வாடிக்கையாளர்கள் முன்னதாக வழங்கப்பட்ட பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்யமுடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் தற்போது எந்தவித சலுகைகளையும் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களாலேயே இந்த சலுகையைப் பெற முடியும் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், “பழைய சலுகையில் ரீசார்ஜ் செய்துகொள்ள வாடிக்கையாளர்கள் முதலில் ஜியோவின் வலைதளத்தில் சென்று லாக் இன் செய்ய வேண்டும். பின்னர் அதிலுள்ள செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று டேரிஃப் ப்ரொடக்‌ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதை க்ளிக் செய்ததும் பழைய ரீசார்ஜ் சலுகைகளின் பட்டியல் வரும். அப்போது அதில் ஒன்றைத் தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “இந்த டேரிஃப் ப்ரொடக்‌ஷன் ஆப்ஷன் எந்தவித சலுகையையும் ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளருக்கு மட்டுமே வழங்கப்படும். அதனால் ஏற்கெனவே ஜியோ சேவையைப் பயன்படுத்துபவர்கள் இந்த பழைய சலுகைகளை ரீசார்ஜ் செய்ய முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #MONEY #AIRTEL #JIO #VODAFONE #BSNL #IDEA