இந்தியாவுல 'யாருக்கு' வேணாலும் பேசுங்க.. வாய்ஸ் 'கால்கள்' முற்றிலும் FREE.. அடுத்தடுத்து 'அறிவித்த' நிறுவனங்கள்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Dec 07, 2019 04:18 PM

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிமிடத்திற்கு 6 பைசாவை அதன் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியா முழுவதும் வாய்ஸ் கால்கள் முற்றிலும் ப்ரீ என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Vodafone Idea, Airtel Removing Voice Calling Limit on New Recharge Pla

ஏர்டெல்லின் அன்லிமிடெட் திட்டங்களின் கீழ் வாய்ஸ் கால்களுக்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது என நேற்றிரவு ஏர்டெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,'' சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கட்டண திட்டங்களுடன் அறிவிக்கப்பட்ட மற்ற நெட்வொர்க் உடனான குரல் அழைப்பு வரம்பு அகற்றப்படுகிறது,'' என கூறியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வேறு எந்தவிதமான நிபந்தனைகளும் இருக்காது என்றும், இனிமேல் ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு, அழைப்பதற்கு எந்தவித வரம்பும் கிடையாது என்றும் இதுகுறித்து ஏர்டெல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏர்டெல்லின் அறிவிப்பை தொடர்ந்து இன்று காலை வோடபோன் ஐடியா நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்புகள் முற்றிலும் இலவசம் என அறிவித்துள்ளது. ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் இந்த ஆபர்களால் ஜியோ பாதிக்கப்படுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags : #JIO