சத்தமில்லாமல் 'பிரபல' திட்டத்தை நீக்கிய ஜியோ... மறுபடியும் மொதல்ல இருந்தா?... 'கதறும்' வாடிக்கையாளர்கள்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Dec 11, 2019 01:44 PM

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பிற நெட்வொர்க்குகளுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கி வருகின்றன. ஆனால் ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Jio Removes Rs 49 Plan, Base Recharge Now Costs Rs 75

ஆமாம். புதிய ஆல்-இன்-ஒன் திட்டத்தின் கீழ் ரூபாய் 49, ரூபாய் 75, ரூபாய் 125, ரூபாய் 155 மற்றும் ரூபாய் 185 ஆகிய திட்டங்களை சமீபத்தில் ஜியோ அறிமுகம் செய்தது. மற்ற நிறுவனங்கள் போல ஜியோவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குமா? என வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்க, சத்தமில்லாமல் ரூபாய் 49 திட்டத்தை ஜியோ நீக்கியுள்ளது.இந்த திட்டத்தின் வழியாக ஜியோபோன் பயனர்கள், எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள், 1 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு அனுபவித்து வந்தார்கள்.

இடையில், ஜியோ நிறுவனம் அதன் ஐ.யூ.சி டாப்-அப் வவுச்சர்களை அறிமுகப்படுத்திய பின்னர், ரூ 49 திட்டத்தைப் பெறும் ஜியோபோன் பயனர்கள் ஜியோ அல்லாத நிமிடங்களுக்கு கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, இந்த திட்டம் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. தற்போது ஜியோவின் குறைந்தவிலை ரீசார்ஜே ரூபாய் 75-க்கு தான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #JIO