‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 16, 2019 02:48 PM

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain Alert in 8 Districts IMD Chennai TN

பருவமழை காலத்தில் வீசும் காற்றின் சாதகப் போக்கு காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில்  ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #WEATHER #HEAVYRAIN #CLIMATE #TN #DISTRICTS #LIST #IMD #CHENNAI