"அப்பா ஞாபகமா இருந்த வண்டிங்க"... 'அதுவும்' இப்போ என்கூட 'இல்ல'... மனமுடைந்த இளைஞரின் 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 07, 2020 12:46 AM

சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் அப்பகுதியிலுள்ள செல்போன் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

Youth from makes a worse decision after bike missing

இந்நிலையில், தியாகராஜனின் விருப்பப்படி அவரது தந்தை உயர்ரக R 15 இரு சக்கர வாகனத்தை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கொடுத்தார். அதனை தொடர்ந்து சில மாதங்களில் அவரது தந்தை உடல் நிலை பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளார்.

தந்தையின் நினைவாக இருந்த தனது பைக்கை மிக கவனமாக பாதுகாத்து வந்த நிலையில் கடந்த மாதம் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் தியாகராஜன் புகாரளித்திருந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக திருடி சென்றவர்களை கண்டுபிடிக்க கால தாமதமாகியுள்ளது.

இதனால் மனமுடைந்து போன தியாகராஜன் இன்று மதியம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக சில தினங்களுக்கு முன், தியாகராஜன் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்று அவரை காப்பாற்றியிருந்தனர்.

தந்தையின் நினைவாக இருந்த பைக் காணாமல் போனதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : #SUICIDE