'ஆர்சிபி-யோட ப்ளஸ், மைனஸ் பத்தி...' 'ரூம்ல வச்சு டிஸ்கஷ் பண்ணினோம்...' - ஷ்ரேயாஸ் போட்ட கச்சிதமான பிளான்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Nov 03, 2020 04:22 PM

நேற்று (02-11-2020) நடந்த ஐபிஎல் மேட்சில் ஆர்சிபி-யை வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி 152 ரன்களுக்கு பெங்களூரு அணியை கட்டுப்படுத்தினர். பின்பு ஷிகர் தவண் (54) , ரஹானே (60) ஆகியோரது அதிரடி ஆட்டத்தில் எளிதில் வெற்றிப்பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

shreyas discussed strengths weaknesses of rcb in hotel room

இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியபோது,

இந்த போட்டி வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்க போகிறது என தெரியும். அதனால்தான் வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தினோம் நெட் ரன் ரேட் குறித்து பெரிதாக கவனம் கொள்ளவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் பிற்பாதியில் வென்ற அணிகள் மொத்தமாக காட்சியையே மாற்றி விட்டனர்.

இந்த ஐபிஎல் தொடர் உண்மையில் உச்சக்கட்டப்போட்டி நிரம்பியதாக உள்ளது. பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டபடி வீசினர். எதிர் அணியினரின் பலம், பலவீனங்களை ஹோட்டல் அறையில் தீவிரமாக அலசினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு  ஷ்ரேயஸ் அய்யர் கூறினார்.

விராட் கோலியும், படிக்காலும் சேர்ந்து 57 ரன்களை 2-வது விக்கெட்டுக்குச் சேர்த்தாலும் டெல்லி அணி இவர்களைக் கட்டிப்போட்டது. 57 ரன்களை எடுக்க 50 பந்துகள் தேவைப்பட்டது. கோலியை அஸ்வின் அற்புதமாக விக்கெட் எடுத்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shreyas discussed strengths weaknesses of rcb in hotel room | Sports News.